பக்கம் எண் :

17

முள் - முழு  - முழுவு. முழுவுதல் = தழுவுதல்.

தழுவி முழுவி என்பது வழக்கு.

முள் - முள்கு. முள்குதல் = தழுவுதல். முள் - (முய்) - முயங்கு. முயங்குதல் = தழுவுதல். முயங்கு - முயக்கு - முயக்கம்.

முள் - (மள்) - மரு = மருவு. மருவுதல் = தழுவுதல். மரு - மருமம் = தழுவும் மார்பு. மரு - மார் - மார்பு. மருமம் - மம்மம் - அம்மம் = முலை, முலைப்பால்.

(முளவு) - விளவு. விளவுதல் = கலத்தல், தழுவுதல். விளவு - விளாவு - வளாவு.

vii. மணத்தல் (புணர்தல்)

தழுவலிற் சிறந்தது மணம்.

மணத்தாலாவது காமக்காதலர் தழுவிக் கூடுதல்.

(உள்) - அள் - அளை - அணை. அணைதல் = புணர்தல்.

(உள்) - இள் - இழை. இழைதல் = கூடுதல்.

குல - கல - கலவி.

கூடு - கூட்டம் = புணர்ச்சி.

குள் - கள் - கள - கண = கூட்டம். கணவன் = கூடுபவன், கொழுநன். கணத்தல் = கூடுதல்.

கள் - (கடு) - கடி = திருமணம்.

“கடியிற் காவலும்”                                           (மணிமே. 18: 98)

துவள்தல் = புணர்தல். துவளை = புணர்ச்சி.

நுள் - நொள் - நொட்டு. நொட்டுதல் = புணர்தல்.

புல்லுதல் = புணர்தல்.

புல் - பொல் - பொலி. பொலிதல் = புணர்தல்.

புள் - (புண்) - புணர் - புணர்ச்சி.

புணை - பிணை. பிணைதல் = புணர்தல்.

(முல்) - மல் - மன் - மன்று - மன்றல் = மணம்.

மன்றுதல் = கூடுதல்.

முள் - (மள்) - மண - மணம். மணத்தல் = கலத்தல், கூடுதல்.