பக்கம் எண் :

47

தமிழ்நாட்டில் வழங்கி வருபவை. கணக்கன் என்னும் குடிப்பெயரைக் கொண்டவர் தூய தமிழ் மரபினர். பழந்தமிழர் இம்மிக் கணக்கும் கீழ்முந்திரி வாய்பாடும் பயின்றவர்.

(10) உறழ்தல் துறை

உறழ்தலாவது ஒன்றாது மாறுபடுதல். அது அகத்தால் உறழ்தலும் புறத்தால் உறழ்தலும் என இருவகை. முன்னது வெறுத்தல்; பின்னது உரசுதல்.

i. உரசுதல்

உல் - உர் - உரிஞ். உரிஞுதல் = உராய்தல். உரிஞ் - உரிஞ்சு.

உர் - உரசு.

உர் - உரை - உராய்.

உர் - அர் - அரம். அர் - (அரவு) - அராவு.

அர் - அர - அரக்கு. அரக்குதல் = தேய்த்தல்.

குர - குரப்பு - குரப்பம் = குதிரை தேய்க்குங் கருவி.துவை - தோய் - தேய். துவைத்தல் = தேய்த்தல், அரைத்தல்.

துவையல் = அரைக்கப்பட்ட கூழ்.

நுள் - நெள் - நெறு - நறு - நறுமு. நறுமுதல் பல்லைக் கடித்தல்.

நறு - நறுநறு (பல்லைக் கடித்தற் குறிப்பு).

நுறு - நெறு - நெறுநெறு (பல்லைக் கடித்தற் குறிப்பு).

நுள் - நெள் - நெரு - நரல். நரலுதல் = உரசியொலித்தல், கத்துதல்.

“ஆடுகழை நரலும்”                                               (புறம். 120)

“வெண்குருகு நரல”                                               (அகம். 14)

நரல் - நரலை = ஒலி, கடல்.

நரல் - பேசும் மாந்தன், மக்கட் கூட்டம். மாந்தனை மற்ற வுயிர்களினின்று பிரித்துக் காட்டுவது, அவனது பேசுந்திறனே. நரல் - நருள்.

நருள் பெருத்துப் போய்விட்டது என்பது தென்னாட்டு உலக வழக்கு.

நரல் - நரன் - நரம்.

வால் + நரம் = வானரம். (வாலையுடைய நரன் போன்ற குரங்கு).