பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

முழு - (முது) - முதல் = திரண்ட மூலதனம்.

முதல் - முதலாளி.

முதல் - முதலை = திரண்ட மரஅடி போன்ற நீருயிரி.

முதலை - மதலை = தூண், பற்றுக்கோடு.

முதல் - முசல் - முசலம் = திரண்ட உலக்கை. முசல் - முசலி.

முழு - விழு = திரண்ட, பெரிய, சிறந்த.

முள் - முரு - முரள் - முரண் - முரடு = பெரியது, திரண்டது. கழுமுரடு = மிகத் திரண்ட பொருள்.

முரடு - முரசு = திரண்ட கட்டையாற் செய்யப்பட்ட மத்தளம், பேரிகை. முரசு - முரசம்.

முரடு - முருடு = முண்டுக்கட்டை.

முள் - மொள் - மோள் - மோளம் - மேளம்.

மோளம் - மோழகம் - மேழகம் - ஏழகம்.

மொள் - மொத்து = திரட்சி, திரண்டது.

மொத்து - மொத்தம். மொத்து - மொத்தை = திரளை. மொத்தை - மொந்தை.

மொத்தை - மோத்தை = விலங்கின் ஆண். விலங்குகளின் ஆண் பொதுவாகப் பெண்ணினும் பருத்திருப்பதால், கடா மோத்தை மேழகம் (மோழகம்) முதலிய பெயர்களாற் குறிக்கப்பெறும்.

மொத்தை - மொச்சை = திரண்ட பயறு.

மொத்து - மத்து = திரண்ட கடைகருவி.

மத்து - மத்தி - மதி - மசி.

மத்தித்தல் = மத்தினாற் கடைதல். மதித்தல் = கடைதல்போற் கையினால் அழுத்திப் பசையாக்குதல். மசிதல் = பசையாதல்.

சோற்றை மதித்துக் குழந்தைக்கு ஊட்டு என்று கூறுதல் காண்க.

கனை தழங்கு முதலிய சொற்கள் திரண்டொலித்தலைக் குறிக்கும்.