பக்கம் எண் :

85

புள் - புரு - புரி - பரி - பரிதி = வட்டம், வட்டமான கதிரவன். பரிதி - பருதி.

பரி - பரிசை - வட்டமான கேடகம்.

பரி - பரிசு - பரிசல் = வட்டமான கூடைத்தோணி.

புள் - (பள்) - பண்டி = சக்கரம், சக்கரமுள்ள வண்டி.

பண்டி - பாண்டி - பாண்டில் = வட்டம், அகல், வட்டமான கிண்ணம், சாலர்.

முள் - முட்டு - முட்டை = சுழி, சுன்னம்.

முள் - (மள்) - (மண்) - மணி = வட்டமான வெண்கலம்.

முண்டு - மண்டு - மண்டி. மண்டியிடுதல் = காலை மடித்தல் அல்லது மடக்குதல்.

மண்டுதல் = வளைதல். மண்டு - மண்டலம் = வட்டம், வட்டகையான நாட்டுப்பிரிவு, நாற்பான்நாள் வட்டம்.

மண்டலம் - மண்டலி. மண்டலித்தல் = வட்டமாதல், முழுமை யாதல், நிரம்புதல்.

மண்டலம் - மண்டிலம் = வட்டம், வட்டமான கோள், (கதிரவன் திங்கள் முதலியன), வட்டமான கண்ணாடி.

மண்டில யாப்பு, மண்டலித்தல், நிலைமறி மண்டிலம், அடிமறி மண்டிலம் முதலியன தொன்றுதொட்டு வழங்கிவரும் தமிழ் யாப்பிலக்கணக் குறியீடுகள், அடிநிரம்பி வருதல் மண்டில யாப்பாகும். வட்டரவுக் கருத்து முழுமை அல்லது நிறைவுக் கருத்தைத் தழுவும்.

(மள்) - வள் - வள்ளம் = வட்டமான கலம்.

வள் - வள்ளி = வளையல்.

வள் - வளை. வளை - வளையம். வளை = வளையல், வளைவி.

வள் - வட்டு = வட்டமான கருப்புக்கட்டி, வட்டமான ஓடு

வட்டு - வட்டி = வட்டமான பெட்டி.

வட்டி - வட்டில் = வட்டமான கலம்.

வட்டு - வட்டம் = வட்டகை, வட்டாரம்.

வட்டு - வட்டணம் = வட்டமான கேடகம். வட்டணம் - வட்டணி. வட்டணித்தல் = வட்டமாதல், வட்டமாக்குதல்.

வட்டு - வட்டணை = வட்டம், கேடகம், சாலர்.