அமைத்துக்கொண்டனர். முதன் முதலாக மக்கள் அமைத்தது பட வெழுத்தே. எழுத்து என்னும் சொல் முதன்முதலாக ஓவியத்தையே குறித்தது. இன்றும் ‘படமெழுதுதல்’ என்னும்வழக்கைக் காண்க. “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்” என்னும் பரிபாடல் அடியில் (19:53), எழுத்து என்பது ஓவியத்தை உணர்த்திற்று, “ உருவே யுணர்வே யொலியே தன்மையென இருவகை யெழுத்தும் ஈரிரண் டாகும்’’ “ காணப் பட்ட வுருவ மெல்லாம் மாணக் காட்டும் வகைமை நாடி வழுவில் ஓவியன் கைவினை போல எழுதப் படுவ துருவெழுத் தாகும்’’ என்பன, யாப்பருங்கலவிருத்தி மேற்கோள். இந் நூற்பாக்களினின்று முதற்காலத்திருந்த தமிழெழுத்துப் படவெழுத்தே (Hieroglyph) என்றுதுணியலாம். தமிழ் நெடுங்கணக்கிற்கு அரிவரி என்று பெயரிருப்பது, அது இடைக்காலத்தில் ‘அரிஓம்’ என்று சொல்லித் தொடங்கப் பெற்றதை அறிவிக்கும். 8. அரசன் சிறுகுழந்தைகட்கு எங்ஙனம் தாயுந் தந்தையும் தெய்வமோ, அங்ஙனமே பழங்கால மக்கட்குஅரசன் தெய்வம். உணவளித்தும் பகையழித்தும் மக்களைக் காத்த காவலன் தெய்வமாக அல்லது கண்கண்டதெய்வமாகக் கருதப்பட்டும் வணங்கப்பட்டும் வந்தான். மணவறையில் ‘அரசாணிக்கொம்பு’ நட்டும் அல்லது கட்டும் வழக்கம், பண்டைக் காலத்தில்அரசவணக்கம்பற்றித் தோன்றிய தாகத் தெரிகின்றது. “ நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்’’ என்பது புறம். கோவில் அல்லது கோயில் என்பது முதலாவது அரசனது அரண்மனையையே குறித்தது. கோ - அரசன்;இல் - வீடு. அரச |