பக்கம் எண் :

55

சில ஒருபொருட் பலசொற்கள், வேர்ப்பொருள் காரணமின்றி ஆட்சி காரணமாகவே வெவ்வேறுபொருள் குறிப்பனவாயுள்ளன. தொல்காப்பியனார்,

“ அன்ன ஆங்க மான இறப்ப
  என்ன உறழத் தகைய நோக்கொடு
  கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்’’                   (உவமவியல், 12)

“ எள்ள விழையப் புல்லப் பொருவக்
  கள்ள மதிப்ப வெல்ல வீழ
  என்றாங் கெட்டே பயனிலை யுவமம்’’                         (உவமவியல், 14)

“ கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய
  ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்பஎன்
  றப்பால் எட்டே மெய்ப்பால் உவமம்’’                           (உவமவியல், 15)

“ போல மறுப்ப ஒப்பக் காய்த்த
  நரவியப்ப நளிய நந்தஎன்
  றொத்துவரு கிளவி உருவின் உவமம்’’                       (உவமவியல், 16)

என கொடுத்தது ஆட்சிபற்றியே.

இனி அவர்,

“ செலவினும் வரவினும் தரவினும் கொடையினும்
  நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும்
  தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
  அம்மூ விடத்தும் உரிய என்ப’’                                    (கிளவியாக்கம், 28)

“ அவற்றுள்,
  தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
  தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த’’                              (கிளவியாக்கம், 29)

“ ஏனை யிரண்டும் ஏனை யிடத்த’’                               (கிளவியாக்கம், 30)

“ யாதுஎவன் என்னும் ஆயிரு கிளவியும்
  அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்’’               (கிளவியாக்கம், 31)

“ அவற்றுள்,
  யாதுஎன வரூஉம் வினாவின் கிளவி
  அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்
  தெரிந்த கிளவி யாகலும் உரித்தே’’                              (கிளவியாக்கம், 32)