நாட்டு நாகன்பாடி என்ற ஊர் தோன்றியிருக்குமென நினைத்தற்கு இடமுண்டாதலால் மதுரைத் தமிழ்க்கூத்தன் என்பார் பாண்டி நாட்டுச் சான்றோர் என்றும் தமிழ்க்கூத்தன் நாகன் தேவனாரைச் சோழ நாட்டுச் சான்றோர் என்றும் மதுரை என்பது ஏடு எழுதியவர்களால் ஏற்பட்ட கைப்பிழை என்றும் தெளியவேண்டும் என்பர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள். மதுரை நாயகம் பிள்ளை | ஊர் : | தென்காசி. | | நூல் : | வள்ளியப்ப பிள்ளை பா.கி. என்பவர் இயற்றிய ‘மகப்பேற்றுப்பதிகம்’, திருமலைத் திருக்குவளைமாலை, ‘உலகாம்பிகை அடைக்கலமாலை’, ‘சமயமதி’ திருமலைக்குமரன் அலங்காரம், முதலிய நூல்களைப் பாராட்டி வழங்கிய சிறப்புப்பாயிரம். |
மதுரை நாயகம் பிள்ளை, சு (20 நூ) | ஊர்: | திருச்சிராப்பள்ளி. | | தந்தை : | சுப்பிரமணிய பிள்ளை. | | வாழ்ந்தகாலம் : | 1845 - 3-4-1920 |
இவர் பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் உறவினர். நாகப்பட்டினத்தில் புத்தகக்கடை வைத்திருந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடத்தில் புராண நூல்களையும், சமயநூல்களையும் கற்றார். நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் நீதிமன்றத்தில் 55-ஆண்டுகள் அமீனா வேலை மேற்கொண்டார். இவ்வலுவலோடு பொதுநலத் தொண்டிலும் ஈடுபட்டார். இவர் நாகப்பட்டினத்தில் இருந்தகாலை, வைணவசமய அறிஞர் ஒருவர் திருமாலின் பெருமைகளை எடுத்துச் சொல்லியதோடு, சிவபிரானை இழித்துப் பேசியதால் மனம்வருந்திச் சைவசித்தாந்த
|