இலக

6

ஆராய்ச்சி உரை

இலக்கியங்களிலும் வாய்மொழியிலும் கண்ட பல அமைதிகளை நுனித்துணர்ந்து அவற்றைப் பற்றிய வரையறைகளையும் தொல்காப்பியர் தம் நூலில் இணைத்துக்கொண்டார். சூத்திரங்களில் ‘என்ப’ என்றும், ‘என்மனார் புலவர்’ என்றும் அடிக்கடி வருவதனால் தொல்காப்பியர் பலகாலமாக வழங்கிவந்த இலக்கண மரபுகளை ஏற்று ஒழுங்குபடுத்தியிருக்கிறார் என்பது தெரியவரும்.

அடிவரையறை இல்லாத செய்யுட்கள்

   லக்கியத்தைப் பற்றியும் செய்யுட்களைப் பற்றியும் சொல்லி வரும் செய்யுளியலில் ஓரிடத்தில் அடிவரையறையில்லாத செய்யுட்கள் இன்னவை என்று கூறி, அவற்றிற்கு இலக்கணம் அமைக்கிறார்.

“எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின
அடிவரை இல்லன ஆறென மொழிப”1

என்பது ஒரு சூத்திரம். ‘அகமும் புறமுமாகிய எழுநிலத்தும் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத்தன ஆறாம் என்றவாறு’ என்பது பேராசிரியர் உரை. முன்னால் அடிவரையறையுள்ள செய்யுட்களுக்குரிய இலக்கணத்தைக் கூறியிருக்கிறார் தொல்காப்பியர். இப்போது அடிவரையறை இல்லாதன இன்னவை என்று சொல்ல வருகிறவர், முதலில் அவை ஆறு என்று தொகுத்துக் கூறினார். கூறும்போது: “ஆறென மொழிப” என்றார். ‘இந்த ஆறு என்ற பகுப்பு நெடுங்காலமாகப் புலவர் உலகத்தில் வழங்கி வருவன’ என்ற கருத்தை ‘மொழிப’ என்பது காட்டும்; மொழிப-புலவர்கள் சொல்வார்கள். இவ்வாறு தோற்றுவாய் செய்துவிட்டு அந்த ஆறு வகைகளையும் ஒரு சூத்திரத்தில் சொல்கிறார்.

    “அவைதாம்
    நூலி னான, உரையி னான,
    நொடியொடு புணர்ந்த பிசியி னான,
    ஏது நுதலிய முதுமொழி யான,
    மறைமொழி கிளந்த மந்திரத் தான,
    கூற்றிடை வைத்த குறிப்பி னான,”2

    இந்தச் சூத்திரத்தில் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி என்னும் ஆறு சொல்லப்படுகின்றன. நூல் என்பது இலக்கணம்; அது புலவர் இயற்றுவது. உரை
___________________________________________________

1. செய்யுளியல், 164.                  2. செய்யுளியல், 165.