த
தான்; கப்பலில் ஏறிவந்தான்;
கோட்டையையும் காடு மலைகளையும் கைப்பற்றினான்; ராச்சியத்தைப் பிடித்துக் கொடியேற்றினான்;
சென்னைக்குள்ளே வந்தான்; வேறு ஊர்களுக்கும் போனான்; நீலகிரியில் பங்களாக் கட்டினான்; வேட்டையாடினான்;
கார், ரெயில், சைக்கிள், டிராம், ஆகாசக் கப்பல், எலக்ட்ரிக் விளக்கு எல்லாவற்றையும்
கொண்டுவந்தான்; தார் ரோடுப் போட்டான்; ஆஸ்பத்திரி கட்டினான்; எழுத்தறிவு புகட்டினான்;
கிராப்பு, காபி, சட்டை ஆகிய பழக்கங்களை உண்டாக்கினான்; கண் வைத்தியம் பண்ணினான்.
வெள்ளெழுத்து மாறிருச்சே
இந்த வெள்ளைக் காரன்
நல்லெழுத்து வந்திருச்சே
இந்த வெள்ளைக் காரன்1
என்று ஆங்கிலேயர்களின் புகழைப்
பாடுகிறது இந்தப் பாட்டு.
___________________________________________________
1. ப. 344 : 40.
|