III

66

ஆராய்ச்சி உரை

III

பொருள் உலகம்

    வாழ்க்கையில் வழங்கும் பொருள்களும் சிந்திக்கும் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும் இலக்கியத்தில் வருகின்றன. வாழ்க்கையோடு நெருங்கிப் பிறந்து வளர்ந்த நாடோடி இலக்கியத்தில் பெரும்பாலும் உண்மைப் பொருள்களும், இயல்பான எண்ணங்களும், கண்ணாரக் காணும் காணும் செயல்களும் காட்சியளிக்கும். அவற்றைத் தொகுத்து வகைப்படுத்திப் பார்த்தால் பல உண்மைகள் புலனாகும். பின்னே வரும் ஆராய்ச்சிப் பகுதிகளில் அத்தகைய வகைகளை அகராதி வரிசையில் அமைத்துத் தந்திருக்கிறேன்.

    சொல், பொருள் என்று இருவேறு உலகம் உண்டு. சப்தப் பிரபஞ்சம், அர்த்தப் பிரபஞ்சம் என்று அவற்றைக் கூறுவார்கள். பொருள் தோன்றி, அதைக் குறிக்கச் சொல் தோன்றுகிறது. ஆதலின் முதலின் பொருளுலகத்தைப் பார்ப்போம்.

    இந்தப் பிரிவில் அணி, ஆடை, உணவு, பழம், புதுப் பொருள்கள், பூ, மாடு, மீன் என்பவற்றை வகை வகையாகப் பார்க்கலாம்.

1. அணிவகை

    மனிதன் தன்னை அழகுபடுத்திக் கொள்ளவும் ஆபத்துக்கு உதவவும் அணிகளை அணிகிறான். அவை காலத்துக்கும், இடத்துக்கும், வாழ்க்கை நிலைக்கும், ஆண், பெண்பாலுக்கும், உறுப்புக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. பல அணிகள் மறைந்து போயின; பல புதிய அணிகள் வந்துவிட்டன.

அரைமூடி  

காலாழி

ஈய மோதிரம்

கைவளையல்

எட்டுக் கல் கம்மல்

கொண்டைத் திருகு

ஒட்டியாணம்

கொப்பு - காதணி

ஓலை 

கொலுசு

கங்கணம்  

சங்கு

கணையாழி

சரடு

கம்மல்

சரப்பளி

கருகுமணி

சலங்கை

கனகமணி

சிலம்பு

காப்பு

சுட்டி

கால்தண்டை 

தங்கச் சங்கிலி