98

ஆராய்ச்சி உரை

அவுங்க, அவுக, அவாள், அவா என்று பலவாறு சிதைந்து வழங்குகிறது.

    இந்தச் சிதைவுகளைப் பேச்சு வழக்கில் பெருகக் காணலாம். நாடோடிப் பாடல்களிலும் மிகுதியாக இவை வழங்குகின்றன. இந்தப் புத்தகத்தில் வரும் சிதைந்தசொற்களைத் தொகுத்து வகைப்படுத்தி, அவற்றினூடே சில பொது இயல்புகளை ஆராய்ந்து பின்னே வரிசையாகக் கொடுத்திருக்கிறேன்.

    இத்துறையில் செய்ய வேண்டிய வேலை கடல்போல இருக்கிறது. தமிழ்நாட்டில் வழங்கும் மொழிச்சிதைவுகளை எல்லாம் தொகுத்து ஆராய்ந்தால் அந்தச் சிதைவுகளிலும் ஒரு நெறி இருப்பதை உணரலாம். இந்தப் புத்தகத்தில் சொற் சிதைவு உருவங்கள் யாவும் வந்துள்ளன என்று சொல்வதற்கில்லை. ஆயினும் கிடைப்பவற்றைப் பாகுபடுத்தி ஆராய்ந்திருக்கிறேன்.

    சிதைவுச் சொற்களைத் தொகுத்துப் பின்னே அகராதி வரிசையில் கொடுத்திருக்கிறேன்.

1. முதலில் கெடுதல் :

(அ)டா, (அ)டி, சொல்லுங்கம்மா1

2. முதலில் திரிதல் :

i எ-செரி, தெரிசிப்பேன்

ii ஒ-பொம்பரம், ரொப்பி2

3. இடையில் கெடுதல்: 

சொல்லாதே(அ)டா, சொல்லாதே

அ(டி)

4. இடையில் திரிதல்:

i ஆ-என்னாங்கடி, என்னான்னா,

ii இ-எதினால், கம்பிளி

iii உ-அடக்குடி, இழுத்துது

5. ஈற்றில் தோன்றுதல் :

நம்ம

அக்கால்

‘ஆக்க’ ஆதல்:

மிஞ்சினாக்க 

அல்லவோ

‘அல்லோ’ ஆதல்

1. இடையில் திரிதல் :

அ : இருக்கிறயே

இ : பேசிறியா3

ஐ - அடக்கிறையே, கண்டையா,

    போனையே

ஆய்

ஈற்றில் திரிதல்:

i ஏ-போவே, போனே

ii ஐ-கூப்பிட்டையே

1. முதலில் கெடுதல் :

ரெண்டு4

2. முதலில் திரிதல்:

i. ஈ-கீச்சுப்புட்டேன்

ii உ-துறப்பு, புடி, புண்ணாக்கு,

புள்ளை, முட்டாயி

iii எ-கெடக்குது, செறிசு,

பெரட்டாசி, வெறகு

___________________________________________________
1. இது தொடர்மொழியில் வருமொழி 
  முதல் கெட்டது.
2. விகாரத்தின்மேல் விகாரம்.
3. பேசுகிறாயா என்பதில் உண்டான
  விகாரங்களில் றா, றி ஆயிற்று.
4. விகாரத்தின்மேல் விகாரம்.