பக்கம் எண் :

நல

118

மலையருவி

நல்லகருப்பம் பட்டியிலே - ஏலங்கிடி லேலோ
    நல்லெண்ணெயும் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

76

காயங்குளத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    காய்கறியும் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.
               

77

கண்டிகொழும்பு தேசம்போயி - ஏலங்கிடி லேலோ
    கடைச்சாமானம் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.
         

78

தாராபுரம் போய்நாம் - ஏலங்கிடி லேலோ
    தாய்பிள்ளையைக் கூப்படலாம் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

79

நாகலாபுரம் நாகசுரம் - ஏலங்கிடி லேலோ
    நாம்ஒழுங்கு செய்யலாம் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.
   

80

நல்லநாள் எல்லாம்பார்த்து - ஏலங்கிடி லேலோ
    நல்லமுகூர்த்தம் வைக்கலாம் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

81

ஊர்நாடெல் லாம்அறிய - ஏலங்கிடி லேலோ
    ஒழுங்காத்தா லியுங்கட்டலாம் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.
              

82

________