மூட
மூட்டைக்குள்ளே - ஏலேலோ
கேப்பை மாவும் - ஐலசா
போட்டு நல்லா - ஏலேலோ
தாட்டிடலாம் - ஐலசா.
6
மேட்டுருக்கு - ஏலேலோ
மேல் மலையில் - ஐலசா
துட்டு மாத்திரம் -
ஏலேலோ தட்டக்கூடா - தைலசா.
7
ரயிட்டன் வந்து - ஏலேலோ
லயிட்டுப் போட்டு - ஐலசா
சயிட்டடிப்பான் - ஏலேலோ
நயிட்டிலேதான் - ஐலசா.
8
நாளெல்லாம் - ஏலேலோ நாற்பது மைல் - ஐலசா
நடக்கணுமே - ஏலேலோ
நங்கைமாரே - ஐலசா.
9
காட்டுரோட்டில் - ஏலேலோ
காட்டுப்பறவை - ஐலசா
மூலைமுக்கிலே - ஏலேலோ
முள்ளம்பன்றி - ஐலசா.
10
ஆனைக்காடும் - ஏலேலோ
சண்டைக்காடும் - ஐலசா
அங்கிருக்குது - ஏலேலோ
அண்ணன்மாரே - ஐலசா.
11
மேட்டுப்பக்கம் - ஏலேலோ
பொட்டிக்கடை - ஐலசா
தட்டுத்தட்டா - ஏலேலோ
சுட்டுவச்சான் - ஐலசா.
12
காரவடை - ஏலேலோ
பூந்திலட்டும் - ஐலசா
கனமாவாங்கி - ஏலேலோ
சாப்பிடலாம் - ஐலசா.
13
ஆப்பக்கடையும் - ஏலேலோ
காப்பிக்கடையும் - ஐலசா
அகப்படுமாம் - ஏலேலோ
சாப்பிடலாம் - ஐலசா.
14
காசில்லாட்டி - ஏலேலோ
கங்காணிதான் - ஐலசா
கணக்குப்பார்த்து -
ஏலேலோ கொடுத்தடைப்பான் - ஐலசா.
15
கண்ணிலேபார்ப்போம்
- ஏலேலோ களைக்காட்டைத்தான் - ஐலசா
கால்நடையோ ஏலேலோ
சாரமில்லை - ஐலசா.
16
__________
______________________________________________________
8.
Writer, Light, Sight, Night.
|