பக்கம் எண் :

New Page 1

கள்ளன் பாட்டு

181

நெல்லறுக்கப் போனவளை
        நிற்கவைத்துப் பாதையிலே
    சொக்கத்தங்க நகைகளெல்லாம்
        பக்குவமாய்ப் பூட்டிவிட்டு
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

26

கையெடுத்த பேருக்கெல்லாம்
        கைநிறையப் பணங்கொடுத்து
    பைகளைத் திறக்கச்சொல்லி
        பற்றாததுக்கும் போட்டுரொப்பி
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

27

தங்கம்பொன் வெள்ளியெல்லாம்
        தண்ணிக்குச் சமமாய்எண்ணித்
    தர்மத்தை மனசில்எண்ணித்
        தானதர்மம் எல்லாம்பண்ணி
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

28

உள்ளுக்குஓ ராளைவிட்டு
        உளவெல்லாம் அறிந்துகொண்டு
    நல்லமாதிரி யேபோயி
        சொல்லாலேகா செல்லாம்வாங்கி
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம
            நாடார்ஜம்பு லிங்கம்.

29

ஆறும்இல்லை நூறும்இல்லை
        ஆளும்இல்லை பேரும்இல்லை
    தானேதான் மச்சானோடே
        தக்கபடி அடிச்சுக்கிட்டு
            வாரார்சொக்கத் தங்கம் - நம்ம

            நாடார்ஜம்பு லிங்கம்.

30