வண
வண்டக் கிளிமாடென்று
வாங்கினது அஞ்சுரூபா
வடக்குத்தோட்ட மூலையென்று
கழற்றுறார்கள் வேலையிலே.
119
அறியாமே ஒருவார்த்தை
தெரியாமே
சொன்னாலும்
அருமை தெரிந்தவரே
பொறுமை பொறுக்கவேணும்.
120
வெட்டின கையிலே
தளிர்த்தது
மருக்கொழுந்து
பந்து மருக்கொழுந்தைப்
பாதையிலே கண்டேனடி
121
பல்லு வரிசைக்கல்லோ
பட்டக்கரை நெற்றிக்கல்லோ
சொல்லு உறுதிக்கல்லோ -
உங்களைச்
சொந்தமென்று எண்ணியிருந்தேன்.
122
ஆசை உறவாகுமோ
ஆதரவு சோறாகுமோ
வாய்நிறைந்த பல்லுக்காவி
வயிற்றுப்பசி தீர்த்திடுமோ.
123
கஞ்சிக் கலயங்கொண்டு
கரைவழியே போறதங்கா
ஓவாக் கலயங்கொண்டு
உறவுசெய்ய எந்தவிதம்?
124
சீலை எடுத்துத்தாரேன்
சிவப்புக்குறி போட்டுத்தாரேன்
சாயமுங் காய்ச்சித்தாரேன்
சாமிபக்கம்
போய்விடலாம்.
125
|