பக்கம் எண் :

எம

216

மலையருவி

எமனைநம்பி ஏலேலோ
        காடிருக்க ஐலசா
    காட்டைநம்பி ஏலேலோ
        புல்லிருக்க ஐலசா. 
                  

57

மருமகள் : அளுகாதே அத்தைஇனி
                ஆதரிப்பேன் உன்னைநான்
          . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . .

58

கண்மணி போலேஇனிக்
                காத்து வருவேன்நான்
          பொன்மணி போலேஉன்னைப்
                போற்றி வருவேன்நான்.
    

59

மகளுன்னு என்னைநினைச்சால்
                மகராசியா இருப்பாய்
          மாதாண்ணு நான்நினைச்சு
                மரியாதையாய் இருப்பேன்.

60

வேலைஒண்ணும் செய்யாதே
                வெட்டிஒண்ணும் செய்யாதே
          காலையிலே எழுந்திருச்சு
                வேலையெல்லாம் செய்வேன்நானே.         

61

வெள்ளிக்கிழமை குளிக்க
                வெந்நீர்த்தண்ணி யுங்கொடுப்பேன்
          வியாழக் கிழமையிலே
                வெற்றிலைமடித்துக் கொடுப்பேன்.

62

செல்லப் பிள்ளையைப்போலே
                செழிப்பாக நீஇருப்பாய்
          இல்லேண்ணு சொல்லமாட்டேன்
                இனிப்பாநீ கேட்கிறதை.

63

எள்ளுக்குள்ளே இருக்கும்
                எண்ணெயைப் போலேநாம்
          எந்நாளு மேஇணை
பிரியாமே இருப்போமே. 
              

64

________