பக்கம் எண் :

கன

254

மலையருவி

கன்றுபோற வழியிலேநான் - கண்மணியே
        கல்கிணறு கட்டிவைத்தேன்.

60

 மலடிகைத் தருமமென்று - கண்மணியே
        மாடுதண்ணி குடிக்கலையே!

    மாடுபோற வழிமேலேநான் - கண்மணியே
        மணிபோல வைக்கோல்போட்டுவைத்தேன்.

    மலடிகைத் தருமமென்று - கண்மணியே
        மாடுவைக்கோல் தின்னலையே!

    ஆனிமாசம் வாங்கிவிட்ட - கண்மணியே
        அழகான பசுவும்மலடு.

    குப்பையிலே மேய்ந்துவரும் - கண்மணியே
        கோழிகூடத் தான்மலடு.                    

65

மாமன்மச்சான் ஏசினாங்க - கண்மணியே
        மற்றவர்கள் ஏசினாங்க.

    அண்ணன்தம்பி ஏசினாங்க - கண்மணியே
        அக்காஅத்தை ஏசினாங்க.

    மதனிகொழுந்தி ஏசினாங்க - கண்மணியே
        சதிநினைத்துப் பேசினாங்க.

    சிற்றப்பன்வீட் டாருங்கூடக் - கண்மணியே
        சிரிக்கவும் இடமானேனே!

    மந்தையிலே படுத்துறங்கும் - கண்மணியே
        மாடுகன்றெல் லாம்மலடு.                    

70

வேலிப்பக்கம் மேய்ந்துவரும் - கண்மணியே
        வெள்ளாடெல் லாம்மலடு

    காடெல்லாம் சுற்றிவரும் - கண்மணியே
        கருநாயுந் தான்மல.

    என்முகத்தி லேவிழித்த - கண்மணியே
        எதிர்த்தவீட்டுப் பெண்மலடி.

    அண்டைவீடெல் லாம்மலடு - கண்ணேஎன்னை
        அடுத்தவரெல் லாம்மலடு.