பக்கம் எண் :

3

சிறுவர் உலகம்

263

3.

முக்கட்டு வாணியன் செக்காட
செக்குஞ் செக்கும் சேர்ந்தாட
வாணியன் வந்து வழக்காட
வாணிச்சி வந்து கூத்தாட.

4.

நாலை வைச்சு நாலெடு
நாராயணன் பேரெடு
பேரெடுத்துப் பிச்சையெடு.

5.

ஐவரளி பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது
பத்தாத மஞ்சள் பசுமஞ்சள்.

6.

ஆக்குருத்தலம் குருத்தலம்
அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு சுட்டால் வெண்கலம்.

7.

ஏழு புத்திர சகாயம்
எங்கள் புத்திர சகாயம்
மாட்டுப் புத்திர சகாயம் மகராஜி.

8.

எட்டும் பொட்டும்
இடக்கண் பொட்டை
வலக்கண் சப்பட்டை.

9.

ஒன்பதுநரி சித்திரத்தை
பேரன் பிறந்தது
பேரிடவாடி பெரியாத்தை.
 

10.

பத்திரா சித்திரா கோலாட்டம்
பங்குனி மாசம்
ஆடி வெள்ளிக்கிழமை
அம்மன் கொண்டாட்டம்.