க
கானலிலே ரெண்டுமரம்
கருமிளகு காய்க்கும்மரம்
தன்னாலே காய்க்குமரம்
தருமருடை ஏலத்தோட்டம்.
203
பொட்டியிலே பழமும்இல்லை
பழமெடுக்க மனமும்இல்லை
சாக்கிலே போடச்சொல்லிச்
சவட்டுறாராம் முதலாளி.
204
சிட்டம்பாறைத் தோட்டத்திலே
சேர்ந்துகளை வெட்டையிலே
அகழுக்குள்ளே நின்னுக்கிட்டு
அனத்துதம்மா கொம்பானை.
205
சக்குவெள்ளைத் தோட்டத்திலே
சக்கிலியாள் வேலையிலே
மாட்டுக்கறி இல்லாமே
மயங்குதம்மா கேப்பைக்களி.
206
|