New Page 1
கொடுமைக்கார ரோடேநீ -
சின்னப்பாலகா
கொல்கதாவுக்குப்
போனையோ - சின்னப்பாலகா.
49
கள்ளரோடே சேர்ந்துநீ -
சின்னப்பாலகா
கல்வாரி மலைபோனையோ
- சின்னப்பாலகா.
50
எட்டுவய சாகலையோ -
சின்னப்பாலகா
பட்டுச்சட்டை யெல்லாம்போடச்
- சின்னப்பாலகா.
51
பட்டுப் பிரியம்இல்லையோ
- சின்னப்பாலகா
ரெட்டுத்தானா ஏற்றதுணி
- சின்னப்பாலகா.
52
எட்டாள தேசமெல்லாம் -
சின்னப்பாலகா
எத்தனையோ
கோடிப்பேரு - சின்னப்பாலகா.
53
சுத்தமனசா உன்னைப்போலச்
- சின்னப்பாலகா
சத்தியமா நடக்கலையே
- சின்னப்பாலகா.
54
ஒன்பது வயசுமாச்சோ -
சின்னப்பாலகா
ஊரெல்லாம் பழக்கமாச்சோ
- சின்னப்பாலகா.
55
உற்றார்பெற்றார் எல்லாருமே
- சின்னப்பாலகா
உன்னைமெச்சிக் கொண்டார்களோ
- சின்னப்பாலகா.
56
பத்துவய சாய்விட்டதோ -
சின்னப்பாலகா
பக்திஉரு வாய்விட்டதோ
- சின்னப்பாலகா.
57
நித்தமும்நீ கோயிலிலே
- சின்னப்பாலகா
சத்தம்போட்டுப்
பாடினையோ - சின்னப்பாலகா.
58
ஆளிலே அழகன்நீ - சின்னப்பாலகா
அருமையான பிள்ளைநீ
- சின்னப்பாலகா.
59
நாளுக்கு நாளுநீ - சின்னப்பாலகா
நல்லவழி போய்வந்தையோ
- சின்னப்பாலகா.
60
பதினொருவய சாகலையோ -
சின்னப்பாலகா
பாதிமனிச னாகலையோ
- சின்னப்பாலகா.
61
பந்துவிளை யாடலையோ -
சின்னப்பாலகா
பையன்மாரொ டேநீகூடச் - சின்னப்பாலகா.
62
|