பக்கம் எண் :

ராசாத்தி!

திருவிழா

ரோடு எல்லாம் கொழுத் தாடை
        ரொம்பிக் கிடக்குதுபார் - ராசாத்தி
        ரொம்பிக் கிடக்குதுபார்.     
             

1

நல்ல கரும்பு கட்டுக் கட்டா
        நயமா விக்குதுபார் - ராசாத்தி
    நயமா விக்குதுபார்.   
                     

2

சர்க்கரை மிட்டாயும் பப்பர மிட்டாயும்
        சந்தெல்லாம் விக்குதுபார் - ராசாத்தி
        சந்தெல்லாம் விக்குதுபார்.
  

3

கல்லுக் கண்டும் கடலை அவலும்
        கணக்காய் விக்குதுபார் - ராசாத்தி
    கணக்காய் விக்குதுபார்.
           

4

கும்பல் கும்பலாய்க் குட்டைப் பிள்ளைகள்
        குறுக்கே போறதைப்பார் - ராசாத்தி
        குறுக்கே போறதைப்பார். 
                     

5

நேரு நேராய் நெட்டைப் பிள்ளைகள்
        நின்று பாக்றதைப்பார் - ராசாத்தி
    நின்று பாக்றதைப்பார்.
              

6

நொண்டிப் பிள்ளையும் சண்டிப் பிள்ளையும்
        நொண்டி அடிக்குதுபார் - ராசாத்தி
        நொண்டி அடிக்குதுபார்.     
              

7