பக்கம் எண் :

20காத்தவராயன் கதைப்பாடல்

சுற்றினோம் மதுகரையில் பாண்டியனா
ரெல்லைமுதல் பார்த்து வந்தோம்
 
இத்தனையும் தேடிவந்து மென்மகன்
காத்தவனைக் கண்ட தில்லை,
 
கொத்துமலர் பூத்துநிற்கும் கோனாடு
தேசமதைக் கோலு வோமே
 
     வசனம் : ஆகோ வாருங்கள் சேவகர்களே, திரிசிரபுரத்திற்கு மேற்கு, மதுகரைக்கும் கிழக்கு தேடிப் பார்த்ததிலே காத்தவனைக் கண்ணிலே காணோம். பட்டணத்தைப் பார்ப்போம் வாருங்கள்.
நடை
சிங்காரத் தோட்டம் செந்நெல் பயிர்நிலங்கள்
மங்காத பூஞ்சோலை வாழை கமுகுபிலா
 
செங்கரும்பு மஞ்சளிஞ்சி தெங்குபிலா பின்னைவனம்
குங்குமம் செவ்வலரி குளங்கள் தடங்கள்
 
மலைகள் குகைகளெலாம் அலைந்து மிகப்பார்த்து
வலையில் அகப்பட்ட மான்போலவே மயங்கி
 
தன்னுடன் வரும்படையை தான்பார்த்து ஏதுசொல்வான்
 
     வசனம் : ஆகோ வாருங்கள் தூதர்களே திரிசிரபுரம் முழுவதும் தேடிக் காத்தவனைக் கண்ணில் காணோம். இனிமேல் திரிசிரபுரத்திற்கு கிழக்கு, தஞ்சை நகர்க்கு மேற்கு புதுக்கோட்டைக்கும் வடக்கு, காவேரிக் கரைக்கும் தெற்கும் இதற்கு உட்பட்ட கிராமங்களையெல்லாம் தேடுவோம் தூதர்களே.
நடை
கோனாடு முல்லக்குடி குவளகுடி ஒட்டக்குடி
வானாடும் மேலசிந்தாமணி தேவஸ் தானமுதல்
 
நன்றுலவு தாராநல்லூர் நல்லஇடைத் தெருவும்
வற்றாத பொய்கை மஞ்சுத்திடல் வேங்கூரும்
 
சென்னெல் நதிபரவும் திருவரம்பூர் வீதிவிடங்கம்
கன்னலில் முத்தீனும் கலமலைப்பா குறிச்சி