பக்கம் எண் :

4காத்தவராயன் கதைப்பாடல்

 
நடப்பதைக் தடை செய்ய, மனிதர் சாதியால் பிரிந்திருந்தாலும் அன்பால் பிணைக்கப்பட்டு மணம் செய்துகொள்ளலாம் என்ற கருத்து வளரக்கூடாது என்பதற்காக பரிமணத்தைப் பிராம்மண குலத்தில் பிறந்தவனாகவும் மூன்று நாள் பறைச்சி முலைப்பால் உண்டவனாகவும் கதையின் பிற்பகுதி கூறுகிறது.
 
     ஆனால் கதையின் முற்பகுதியில் அவனது வளர்ப்புத்தாய் அவனை,
 
“பின்புத்திதான் நினைக்கும் பறச்சி பெத்த பிள்ளையவன்
 நாம் பெத்தபிள்ளை யென்றால் நம்மைப்போல் ஆகாதோ?”
 
என்ற கண்ணியில் “பறச்சி பெத்தபிள்ளை” என்று கூறுகிறாள். எனவே சங்கப்பிள்ளை என்பவள் அவன் வளர்ப்புத்தாய்தான் தவிரவும் ஆரியமாலை என்ற பிராம்மணப் பெண் தனது கின்னரி நாதம் கேட்டுத் தன்மீது ஆசைகொண்டுத் தன்னைப் பின்பற்றி வரும்பொழுது, காத்தவராயன் சொல்லுகிற சொல்லிலும் அவன் தன்னைப் பறையன் என்றே சொல்லுகிறான்.
“ஆத்தங்க கரைதனிலே அநேகம் பேர் பார்த்திருக்க
 இதமுள்ள நீராட ஏகினேன் நீர்கேளும்.
 
 தண்ணீர் துறைதனிலே தான்கண்டு மாதயரும்
 என்னழகைக்கண்டு இனிது மையல் தானாகி
 
 என் கிண்ணாரச் சத்தம் கேட்டு மிகநடந்தாள்
 மாதயரே என்பின்னே வாராதே என்று சொன்னேன்
 
 சோகக் கிளிமொழியாள் என் வசனம் கேட்காமல்
 வாரதைக்கண்டு மனதில்பயம் பிடித்து
 
 பார்தனிலே நானும் பறையன், பறையன் என்றேன்”
 
எனவே உட்சான்றுகளால் இவன் பறைக்குலத்தில் பிறந்தவன் என்று தெரிகிறது. இவனை வளர்த்தவர்கள் நாடுகாவல் அதிகாரி சேப்பிள்ளையானும் அவனது மனைவி சங்கப்பிள்ளையுமாவர்.
 
     பறையன் பிராம்மணப் பெண்ணை மணந்து நாடுவிட்டு நாடு போய் வாழ்ந்துவிட்ட உதாரணம் பரவிவிட்டால், சாதிமுறை குலைந்துபோகும் - சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட நிலவுடைமை முறையும் சீர்குலைந்து போகும். இதனைத் தடுக்கவே பிற்கால மேல்சாதியினர், கதையின் ஆற்றலைப்போக்கச் சில மாறுதல்கள் செய்தனர்.
 
     அதில் ஒன்றுதான் காத்தவராயனது கைவவலைவாசமும் சாபமும். அவன் தேவனாயிருந்து சாபத்தால் மனுதர்மத்திற்கு விரோத