பக்கம் எண் :

40காத்தவராயன் கதைப்பாடல்

தேட்டமுடன் குருதாரம் தன்னைத்தீண்டி
   திறமுடைய சந்திரனும் குறைந்துபோனான்
 
வாட்டமுள்ள ராவணனும் பெண்ணாலேதான்
   மாண்டதையும் கேட்டிடுவீர் மன்னவனே
 
 
செய்யாதேதும் செய்தேனோ சேரைத் திறந்தேனோ
வையகத்தில் இல்லாத வன்கொடுமை செய்ததுண்டோ
 
சட்டமுடன் ராசாவே சபைதனிலே இப்போது
கட்டை அவிழ்ந்துவிடும் நடந்ததைச் சொல்லு கிறேன்
 
பூட்டை முறித்தேனோ புதுக்களவு செய்தேனோ
எட்டரைக் குள்ளே எதமாயிருந்த பெண்ணை
 
பத்தரைக் குள்ளிருந்து பதுசைக் குறைத்தேனோ
 
 
தவித்துவரும் மானிடர்க்கு எந்நாளும்
   நிதிகொடுத்துத் தயவு வைத்து
 
விபத்துத்தனை யகற்றி வைக்கும்
   வீரமுடி காத்தவனை வியந்துராசன்
 
அவிழ்த்துவிட உத்தரவு கேட்டு
   மிகசேப்பிளையான் அஸ்தம் தொட்டு
 
கயிற்றினால் கட்டியிருந்த கட்டை
   அவிழ்த்துவிட்டான் கனிவுள் ளோனே.
 
 
கட்டை அவிழ்த்திடவே காத்த பரிமளமும்
சட்டமுடன் இராசாவைத் தான்பூண்டு கைதொழுது
 
வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன்
காருமென்று காவல்தனை கட்டளையும் இட்டீர்காண்
 
பார்தனிலே நான்காவல் பார்த்து வருகையிலே
ஊர்தனிலே நான்காவல் உலாவி வருகையிலே
 
கன்னியர்கள் தன்னைநான் கடைக்கண்ணால் பார்ப்பதில்லை
பெண்களையும் நான்கண்ணால் பிரியமுடன் பார்ப்பதில்லை
 
அறந்தழைக்கும் சுக்ரீவன் ஆக்கினைபோல் நடத்தி
கறந்துவைத்த பால்தன்னைக் காகங் குடியாமல்21