உண்மையில் பொம்மக்கா திம்மக்கா இருவரும்
சக்கிலியப் பெண்கள்
தாமென்று அவர் சொன்னார்.
கதையின்
உயிர் நாடியே கீழ் சாதியில் பட்டன் மணம் செய்து
கொண்டது, அவர்கள் வாழ்க்கையில் இணைந்து ஒன்று பட்டது, அவர்களது
நலனைப் பாதுகாக்க உயிர் விட்டது, ஆகியவையே. அவனை வீரனாக்குவது
அவனது மனிதத்துவம். அதை விடுத்து அவனை உயர்சாதிக்குள் அடைத்து
விதி வலிமையால் அவன் சக்கிலியனால் வளர்க்கப்பட முயற்சி
செய்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள். மேலும் விதியின் வலிமை என்ற
அவர்களது கொள்கையையும், ஜன்மப் பூர்வபலன் என்ற கொள்கையையும்,
இக் கதையினுள் நுழைத்து விட்டார்கள். ஏன் அவர்கள் அப்படிச்
செய்தார்கள்? பட்டவராயன் பண்பு உயர்ந்த பண்பு. அவன் இலட்சிய
புருஷன் என்று உழைக்கும் மக்கள் கருதினார்கள். கூட்டம் கூட்டமாகக்
கோயிலுக்கு வந்தார்கள். வில்லுப்பாட்டு பரவிற்று. இதைக் கண்ட
நிலப்பிரபுக்களும், அவர்களுடைய நண்பர்களான சாதி வெறியர்களும்
கதையை மாற்ற விரும்பினார்கள். மூலக் கதையின் ஜீவனைப் போக்கிவிட
விரும்பினார்கள். இம்மாறுதலின் மூலம் உயிரைப் போக்கடித்தும்
விட்டார்கள். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றி யடைய வில்லை. 200
வருஷங்களில் கதை உழைப்பாளி மக்கள் மத்தியில் நன்கு பரவி விட்டதால்
புதுக்கதை எடுபடவில்லை உண்மையைத் தங்கள் பிற்போக்குக்
கொள்கைகளுக்கு ஏற்ப மாற்ற அவர்கள் செய்த முயற்சி வெற்றியடைய
வில்லை.
முத்துப்
புலவர் உண்மையைக் கூறியதற்காக நாம் அவருக்கு நன்றி
செலுத்த வேண்டும். அவருடைய குடும்பத்தினர்தான் வெகு காலமாக
முத்துப்பட்டன் கதையை வில்லுப்பாட்டாகப்பாடி உயிரோடு
வைத்திருக்கிறார்கள். அவர் உண்மையான கதையைச் சொல்லும் போது
சம்பவங்கள் நடப்பது போல் கண் முன் காண முடிந்தது. அவர் சொன்ன
கதையில் சில அம்சங்கள் அச்சுப் பிரதியோடு வேறு படுகிறது. ஆனால்
இவ்வேறுபடும் அம்சங்களே உண்மை என்று சுப்பிரமணியக் கவிராயரும் கூறுகிறார்கள்.
நமக்கும், நாமறிந்த சமூக - சரித்திரச் சூழ் நிலைகளில் அவை
நாம் உண்மை யென்று நம்பத் தோன்றுகிறது.
அச்சுப்
பாட்டிலிருந்து முத்துப்புலவர் கதை வேறுபடும் அம்சங்கள்
பின் வருமாறு:
1.
சக்கிலியப் பெண்கள் முத்துப் பட்டனைக் கண்டு ஆசைப்
பட்டார்கள்.வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
|