பக்கம் எண் :

கதாபாத்திரங்களின்
இயல்புகள்
19

நாளா வட்டத்தில் இந் நிலப்பிரபுக்களிடம் இவர்கள் காவல்காரர்களாக
அமர்ந்தனர்.

     6. கடைசியாக உடன் கட்டையேறத் தீய்ப்பாவதற்கு சிங்கம் பட்டி
அரண்மனையில் தீ கேட்க பட்டனின் மனைவியர் சென்றார்களென்றும்,
அரசர் தம்மோடு அரண்மனையில் தங்கக் கேட்டுக் கொண்டதாயும்,
அவர்கள் மறுத்தபின் சிதையடுக்கி பட்டனைத் தகனம் செய்ய ஏற்பாடு
செய்ததாகவும் அச்சுப்பாட்டு கூறுகிறது. ஆனால் முத்துப் புலவரும்
சுப்பிரமணியக் கவிராயரும் இது உண்மையல்ல என்று கூறுகிறார்கள்.
முத்துப் புலவர், “உடன் கட்டை ஏற யாரிடமும் கேட்க வேண்டாம், பட்டன்
இரவில் இறந்தார். பக்கத்திலுள்ள சக்கிலியர் விக்கிரமசிங்கபுரம் போய்த்
தகவல் சொன்னார்கள். பசுக்களுக்குடைய கோனார்களும் வேறு
உழைப்பாளிகளும் ஓடி வந்தார்கள். பெண்களுக்குக் காணியளிப்பதாகச்
சொன்னார்கள். அவர்கள் கேட்கவில்லை. உடன் கட்டை யேறினார்கள்.”

     சுப்பிரமணியக் கவிராயர் வேறொரு காரணத்தால் இது நடந்திருக்க
முடியாதென்று சொல்லுகிறார். ஏனென்றால் பட்டன் கதை நிகழ்ச்சிகள் நடந்த
காலத்தில் சிங்கம்பட்டி ஜமீனே தோன்றவில்லை. முன்னரே இதற்குரிய
சான்றுகளை நாம் பார்த்தோம் நீலகண்டன் வாழ்ந்த காலம்தான் பட்டன்
இறந்தகாலம். நீலகண்டனைக் கொன்றுதான் சிங்கம்பட்டியை நல்லகுட்டி
நிறுவினான். அப்படியானால் சிங்கம்பட்டியாரிடம் எப்படி பட்டனது
மனைவியர் தீ கேட்டிருக்க முடியும்?

கதா பாத்திரங்களின் இயல்புகள்


     சென்ற பகுதியில் வில்லுப்பாட்டு அச்சுப்பிரதிக்கும், வில்லுப் பாட்டு
பரம்பரையாகப் பாடப் பெற்று வருவதற்கும், கர்ண பரம்பரைச்
செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்தோம். கதை
நிகழ்ச்சிகளில் மேற் கூறிய இரண்டு மூலங்களிலும் சிற்சில வேறுபாடுகள்
இருக்கின்றன என்று காண்போம். முத்துப் புலவர் தற்போது பாடிவரும்
பொம்மக்கா,-திம்மக்கா-வரலாறு புதுப்புனைவு என்பதை அவரே ஒத்துக்
கொள்கிறார் என்றும் கண்டோம். பரம்பரையாக அவரது குடும்பத்தில்
பாடப் பெற்று வந்த வில்லுப்பாட்டில் கதையின் விறுவிறுப்புக்காகவும்,
கேட்போர் மனதில் உணர்ச்சியைத் தூண்டுவதற்காகவும், சிற்சில மாறுதல்கள்
அங்கும் இங்கும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கதையின் தலைவனான
முத்துப்பட்டன் தலைவியரான பொம்மக்காள்,