|
அட்டதிக்
குலகோர்க் கெல்லாம் அதிபதி யான தீரன்
சட்டமாய் பொதிகை வாழுஞ் சங்கர னளித்த மைந்தன்
துட்டரை யடக்கு கின்ற சொரிமுத்து அய்யன் வாசல்
பட்டன்மேல் வரவு பாட பால முக் கணன்காப் பாமே |
|
நாட்டுவளம் |
|
நாடுநல்லோ
நல்லநாடு நாவலர்கள் புகழும் நாடு
கோடைமழை பொழியும்நாடு குளிர்ந்ததென்றல் வீசும்நாடு
இஞ்சிபிஞ்சி பூக்கும்நாடு இருவாச்சி மலரும்நாடு
வருக்கைப் பிலாமரமும் வளர்ந்தோங்கி செழிக்கும்நாடு
அத்திமுகன்1 குடியிருக்கும் ஆரிய நாடதிலே2 |
|
முத்துப்பட்டனின்
கல்வி அறிவு
|
|
ஆரிய
நாடதிலே அழகுடைய பட்டன்மார்கள்
அண்ணன்பட்டன் தம்பிபட்டன் அப்பாபட்டன் குப்பாபட்டன்
சங்குபட்டன் சரவணபட்டன் தக்கசோம லிங்கப்பட்டன்3
எல்லாத்துக்கும் இளையவனாம் ஏத்தன்4 ஆரிய முத்துப்பட்டன்
அஞ்சுநல்ல வயதுதன்னில் அசலாத்து குழந்தையுடன்
பள்ளிக்குத் தானிருந்து பலகணக்கும் தான்படித்து
ஆனையேற்றம் குதிரையேற்றம் அளவிறந்த தொழில் படித்தான்
மல்லடவு5 சிலம்புத்தொழில் நோக்குவித்தை குறளிவித்தை
வித்தையெல்லாம் தான்படித்து வேதாந்திபோ லிருக்கையிலே |
|
தமையன்களுடன்
சண்டையிட்டு கொட்டாரக்கரை செல்லுதல் |
|
சத்தியவான்
முத்துப்பட்டன் தமயன்மாரோடே சண்டை செய்து
மாதாபிதா வெறுத்து வஸ்துவகை6 தானிழந்து
பிறந்த ஊர் தனைக்கடந்து பிறவூரில் போய்ச்சேர்ந்தான்
இருந்து நினைத்தானே எண்ணமிட்டான் கோடிபுத்தி
படித்ததொழில் செய்யவென்றால் பார்ப்பதற் கொருவரில்லை
அடுத்தஊரு ஆனதிலே அமர்ந்தாலும் சிறப்புமில்லை |