கேட்கலாம். அதன் மூலம் தவறுகளைத் தவிர்க்கலாம். ஒரு சிறு உதாரணம்: அம்மையாரின் நூலின் அனுபந்தத்தில் திரு.திருப்பூர் பழனிசாமிப் புலவர் எழுதிய நூல்களை நான் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கும் ‘புலவர்’ பட்டம் வழங்கியுள்ளார். இம்மாதிரி தவறுகள் தவிர்க்கப்பட்டு இருக்கலாம். மற்றபடி பிருந்தா அவர்களின் முயற்சியை நான் பெரிதும் பாராட்டுகின்றேன். ஏட்டுப் பிரதியிலிருந்து இந்நூல் வெளியிட உதவிய அருட்செல்வர். டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களுக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆரம்ப காலத்திலிருந்து இந்நூல் வெளிவரப் பெரிதும் உறுதுணையாக இருந்த அறிஞர்களையும் உள்ளூர்ப் பெரியவர்களையும் கோவை வானொலி நிலையப் பொறுப்பாளர்களையும் இந்த நேரத்தில் போற்றுகின்றேன். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கும் இந்தப் பதிப்பை வெளிக்கொணர்ந்த நல்ல நூல் வெளியீட்டாளர் நண்பர் நர்மதா இராமலிங்கம் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். | “வெற்றிவேல் இல்லம்” 5, வ.உ.சி.தென்வடல் மெயின் ரோடு தில்லைநகர், கோயமுத்தூர் - 641 026 தொலைபேசி எண்: 0422 - 345568. | அன்புடன் சக்திக்கனல் | | |
|
|