பக்கம் எண் :

512அண்ணன்மார் சுவாமி கதை

உன் சீமையுள்ள மட்டும் செலுத்தியே தந்தாயானால்
உன் லாயத்துக் குதிரை எல்லாம் நன்றாய் எழுந்திருக்கும்
உத்தன் அரண்மனைக்கும் ஒரு தீங்கும் வாராது
என்று சொல்லி கோடங்கி எடுத்துரைத்தானப்போது
கம்பைய நாய்க்கருந்தான் காரியமாய்த்தான் கேட்டு

கோடங்கி சொன்னகுறி தப்பாது என்று சொல்லி
காரியிப்பேர் மந்திரியை கடுகியே வரவழைத்து
ஊருக்கு ஊரு நீங்கள் உத்தரவு தானனுப்பி
சீக்கிரம் வருக வென்று சேவகரைத் தானனுப்பி
ஊருக்கு ஊரு நீங்கள் உகந்திருக்கும் நாட்டாரை

சீமைக்குச் சீமை சிறந்த குடி அத்தனையும்
கம்பைய நாயக்கர் கனத்ததொரு சீமையெல்லாம்
ஓலை கொடுத்துமங்கே ஓட விட்டார் தூதுவனை
சேவகருந் தானோடி தென்னியனார் சீமையெல்லாம்
ஒலைதனைக் கொண்டுபோய் உடனே அவர் கூட்டி வந்து

வந்து குவித்தார்கள் மகா சேனையுள்ள தெல்லாம்
கம்பைய நாய்க்கர் அவர்களை கண்ணாலே தான் பார்த்து
நாட்டாரைத்தான் பார்த்து நாய்க்கரவர் ஏதுரைப்பார்
 

கம்பைய்யன் பெரியக்காண்டி அம்மனுக்கும்
பொன்னர் சங்கருக்கும் பூஜை செய்தல்
 

கேளுங்கள் நாட்டாரே நீங்கள் கிருபையுடனிப்போது
வீரமலை வெண்முடியில் வீற்றிருக்கும் மாதாவும்
காராளர் பொன்னர் சங்கர் கன்னி ஒரு பெண்ணாளும்
அத்தை பிள்ளை மூவருமாய் ஆனைபடை சேனையுடன்
மந்திர மகாமுனியும் மலைக்காவலுடையவனும்

அவர் பந்தி தளத்துடனே பாங்காக இப்போது
நாளை திங்கள் கிழமை சீமையிலுள்ளோரும்
புதுப்பானை தானெடுத்து பொய்கையிலே நீராடி