பக்கம் எண் :

22மதுரை வீரன் கதை

  
தேக்குமரக் காவுகளும்5
     செங்கரும்புச் சோலைகளும்
சண்பகப்பூ நந்தவனம்
     தானே மிகுந்த வனம்
விண்ணுலவு தோப்புகளும்
     விறுகனித் தோப்புகளும்
மல்லிகை மலர்ப் பந்திகளும்6
     மருக்கொழுந்தின் பந்திகளும்
பல்லைமலர்ப் பந்திகளும்

20

     முக்கனிமரப் பந்திகளும்
வானத்து அளாவி நின்ற
     வைத்திடு நெற்பொருளும்
தானம் கொடுக்க வைத்த
     தாழ்வில் களஞ்சியமும்
காம தேனுக்கு நிகர்
     கணக்கில்லா பால்பசுவும்
சேமமிகு ஆடுகளும்
     திரளான மாடுகளும்
பசித்தோர் இளைப்பாற

25

     பாங்கான சத்திரமும்
பொசித்தோருக்குச்7 சம்போகம்
     பொருந்துசில சத்திரமும்
ஆடையில்லார்க்கு ஆடை
     அளித்துவரும் சத்திரமும்
வாடை பனிநீர் புழுகு8
     வழங்கிவரும் சத்திரமும்
வேதியர்க்கு வேதம்
     விளங்கு மரச் சாலைகளும்
சாதிக்குச் சாதி

30

     தங்கமரச் சாலைகளும்
குயிலோசை மிஞ்சும்
     குறைவில்லா மாந்தோப்பும்