| 					 இதனைக் கண்ட நண்பர் உடனே,      “என்ன செய்தி?” என்றனர். 					அதிகத் தயக்கத் தோடு காந்தி      ஐயம் தன்னைக் கூறினர். 					 					அந்த நண்பர் கோபம் கொண்டே,      “ஐயோ! உமக்குக் கொஞ்சமும் 					இந்த நாட்டுப் பழக்க வழக்கம்      இன்னும் தெரிய வில்லையே! 					 					பட்டிக் காட்டு மனிதர் போலப்      பலவும் கேட்டு வருகிறீர். 					வெட்கம், வெட்கம் உம்மை நினைத்து      மிகவும் வருத்தப் படுகிறேன். 					 					இங்கே இனியும் இருக்க வேண்டாம்.      எழுந்து வெளியே செல்லுவீர். 					எங்கோ தின்று விட்டு விரைவில்      இங்கு வந்து சேருவீர். 					 					உண்டு முடித்த பிறகு நானும்      உம்மை அழைத்துச் செல்கிறேன்.” 					என்று கடுமை யாகக் கூற      எழுந்து காந்தி சென்றனர்.  |