பக்கம் எண் :

ஒரு ரூபாய் ஊழியர்

13


     இதைக் கண்ட தாசில்தார், முத்துசாமியை மேலும் நன்றாகப் படிக்க வைக்க
வேண்டும் என்று முடிவு செய்தார். நாகப்பட்டினத்தில் இருந்த மிஷன் பாடசாலையில்
முத்துசாமியைச் சேர்த்துவிட்டார். முத்துசாமி 18 மாதங்கள் அங்கு படித்தார். பிறகு,
தாசில்தார் அவரைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சென்னையில் இருந்த ‘மெட்ராஸ்
ஹைஸ்கூ’லில் சேர்ந்து முத்துசாமி கல்வி கற்றார். அப்போது அவர் கணக்கிலே புலியாக
விளங்கினார். ஓய்வு நேரத்தில் ஏதேனும் புத்தகம் படித்துக் கொண்டேயிருப்பார்.
படித்ததையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வார். அவருடைய அபார ஞாபக சக்தியை
அறிந்து பலர் வியப்படைந்திருக்கிறார்கள்.

     முத்துசாமி சென்னையில் படித்துக் கொண்டிருந்த போது, ‘கல்வித் துறைக் கழகம்’ ஒரு போட்டி வைத்தது. ‘தீய பழக்கங்களும் அவற்றைத் திருத்தும் வழிகளும்’ என்பதைக்
குறித்து ஆங்கிலத்தில் மிகவும் நன்றாக எழுதும் மாணவனுக்கு 500 ரூபாய் பரிசு என்று
அறிவித்திருந்தார்கள். பல மாணவர்கள் அப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.
அவர்களில் முத்துசாமியும் ஒருவர்.

     அப்போதிருந்த சென்னை மாநிலக் கல்வித் துறைத் தலைவரும், உயர்நீதி மன்ற
நீதிபதி ஒருவரும் போட்டிக்கு வந்த கட்டுரைகளைப் படித்துப் பார்த்தார்கள்.
முத்துசாமியின் கட்டுரையைப் படித்துப் பார்த்த அவர்கள் இருவரும், ஒரு சிறுவன்
இவ்வளவு திறமையாக, அழகாக எழுதியிருக்கிறானே !”