காட்சி - 13
இடம் : முடிகொண்ட சோழபுரத்து அரண்மனை.
நேரம் : பிற்பகல்
தோன்றுவோர் : இராசராசர், இராசேந்திரன்,
பிருமாதிராசன்,
புவனமுழுதுடையாள்.
[அரசர் இராசராசர் கவலையுடன் அமர்ந்திருக்க, அருகே அமர்ந்து ஆறுதல்
கூறிக்கொண்டிருக்கிறாள்,
அரசி புவனமுழுதுடையாள்.]
புவன : அரசு வாழ்க்கையில் போர் என்பது
அதிசயமல்லவே! முடிசூடிய
கணத்திலயே போர் வரும் என்பதை அறிந்தவர் நீங்கள்! பாண்டியன்
படையெடுத்து வந்துள்ளான் என்பதைச் செவிமடுத்ததும் சிந்தை
கலங்குவதேன்?
இராசராசர் : புவனமுழுதுடையாளே, என் கவனம்
முழுவதும் நம் நாட்டு
மக்கள் பக்கம் திரும்பியதால்தான் கவலை மிகுகிறது. பாண்டியன்
படையோடுவருவான் என்பதை எதிர்பார்த்தேன்; இவ்வளவு விரைவிலே
வருவான் என்பதை எதிர்பார்க்கவில்லை.
நானும் புதல்வனும் நாட்டைச்
சுற்றிப்பார்த்தபோது, மக்கள் போரின் பேரைக் கேட்டாலே
வெறுப்பதைக்
கண்டோம். ‘எப்போது ‘போர் வரும்?’ என்று ஏங்க வேண்டிய
படைவீரர்கள்,
‘போர் வந்து விடுமோ?’ என அஞ்சியதைக் கண்டோம்.
அதனால் நாட்டுப்பற்றும் ராஜசேவையும்
இருவிழிகள் என எண்ணும்
இயல்புடைய
இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துப்புதிய படை திரட்டச்
சிலநாளுக்குமுன்னேதான் உத்தர |