|
| தாப்பரியமாக உந்தன் சமூகத்தில் வாய்ப்புதைத்து |
| சேப்பிளையான் சொல்ல செவிகொடுத்து நீர்கேளும். |
| |
| மாற்றலரை வென்ற மகராசன் ராசேந்திரா |
| கீர்த்திப் பிரதாபமுள்ள கிருபா சமுத்திரரே |
| |
| தங்கமகா மேருவே, சகல சாம்ராச்சிய யோகமுள்ள |
| சிங்காதனக் கொலுவில் நீர் தேவேந்திரனுக் கிணையாய் |
| |
| வேதப் பிரதாபம் மிகுமறைநூல் வல்லவர்க்கு |
| நீதிப் பிரதாபமுடன் நீயே கொடைக்கர்ணன். |
| |
| சங்கரனு மாமுதலா சதுர்முக பிர்மா1 அடியார் |
| தாங்கள் களிக்க அளித்திடும் வாரிதியே. |
| |
| கல்விக் கரசே கருணைப் பிரதாபமுள்ள |
| செல்வத்துரையே உலகம் செழிக்கவந்த சீமானே. |
| |
| கரறாச மார்த்தாண்ட கண்டப் பிரசண்டனல்ல |
| பரறாசர் கொண்டாடும் பாக்கிய மகறாசேந்திரா. |
| |
| அடியார்களுக் கென்று அதிககலி தானோட |
| மிடிதீர்க்க வந்த முகிலையொத்த கையோனே. |
| |
| பொய்யாத வாசகனே ! புண்ணிய சிரோண்மணியே ! |
| மெய்யாக தேசம் விளங்கவந்த சீமானே ! |
| |
| வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் |
| பாருமையா யானடியேன் பணிந்து உரைக்கின்றேன் |
| |
| மாத்தாம லெப்போதும் மானம் அபிமானம் வைத்து |
| பாத்தோர்கள் மெச்சிடவே பாதி காவலுங் கொடுத்தீர் |
| |
| அருமையுடன் எங்களுக்குஅரசுகாவல் கொடுத்தீர். |
| பெருமையுடன் எங்களுக்குப் பேரரசுங் கொடுத்தீர் |
| |
| கொப்புடனே எங்கள்குடி குலமெல்லாம் தழைக்கவே |
| சேப்பிளையான் காவலென்றால் சீமையெல்லாம் கொண்டாட |
| |
| பேரும் கொடுத்தீர் பெரியதனமும் தான்கொடுத்தீர். |
| ஆரும் மதித்திடவே ஆண்மைகள் உண்டாக்கிவைத்தீர். |
| |
| சாதரிப் பாகுடனே சால்வையுமே கொடுத்தீர். |
| மாதரி பாகுடனே வல்லவாட்டுமே கொடுத்தீர். |
| |
| காதுக் கிசைந்த கடுக்கண் அரணாவுடனே |
| தாதும் புனல்மார்பா சரப்பளியுமே கொடுத்தீர்2 |