|
முன்னவன் கையில் முறிகடனோ பட்டிருந்தோம் |
மின்னாளே நீயழுக வேண்டாமென” உரைத்து |
|
சேனைபடை கூட்டிச் சேப்பிளையான் அப்போது |
ஆனைப்படையைப் பார்த்துச் சொல்லுவான் ஓர்வசனம் |
|
சத்திபதி சித்தமுடன் உத்தரவு பெற்றருளி |
தம்பியர்கள் மூவருடன் |
|
உதிர்பெற்ற கோட்டையது மேல்வாசல் வழிசென்று |
தனசேகரத் துடனே |
|
சத்தர்முதல் மொழிபெற்ற உறையூர் தென்னூரோங்கு |
வளர்ப்புத்தூர் தனிலிருந்து |
|
போதமுடன் வெங்கலக்கொம் புகள்பிடித்துப் புகழ்பெற்ற |
முரசு அறையவும் |
|
வித்தரண சூரர்கள் வித்தரணிகள் புகழ் |
வெற்றித் தமுக்கடித்து |
|
வீரானகம்ப ரசம்பேட்டை முதலாக மேல்முகம் |
சாலை வழியாய் |
|
மத்தமுடி ராசாக்கள் வழக்கைப் பிரித்திடும் |
மதுகரைக்கும் கிழக்கு |
|
வளர்தோகை மலைமுதல் பொன்விளைந்தாம் பட்டிவல்லம் |
தஞ்சாவூர் முதல் |
|
சுத்திவர வீரர்கள் காவேரிக் கரையிலும் |
சர்க்கார் பாளையத்திலும் |
|
சிறந்த தேவதானப்பட்டி திருச்சிறார் தேரோடும் |
வீதி தனிலும் |
|
பக்தர்கள் பட்டிணம் தன்னிலும் பாலக் |
கரை முழுதும் |
|
பரிவுடன் தாராநல்லூர் வரகநேரி பக்தர்கள் |
முத்த மதிலும் |
|
நதியேவட கரைசுற்றியே தேடியும் நந்திதிரு |
வேங்கி வரையிலும் |
|
நலமான அரியலூர் வயிரசெட்டி பாளையம் |
நலமுதவும் சங்கேந்தியும் |
|
ஏத்தியே தன்னரசு பாதிகாவல் சீமையெங்கும் |
தேடியும் என் மகனைக் காணேனே8 |