|
ஈச்சநாடு மேவும் திருநாட்டன் குளம் |
ஆசலர்கள் போற்றும் அரியமங்கல முதலாய் |
|
கூத்தப்பால் நவல்பட்ட கொக்கரசன் பேட்டைமுதல் |
வாய்த்த கிளியூரும் மாறாதவாழ்வு பெருகும் |
|
மாசானங்குடி பந்தாளங் கோட்டை பழைய குரிச்சி |
நெல்விளைந்து போரேறும் நெறியுள்ள நன்னாடு |
|
பொன்விளைந் தான்பட்டி புதுக்கோட்டை தன்முதலாய் |
சீருடனே கீழ்பாதி சிறந்ததொரு வல்லமுதல்10 |
|
ஊரெல்லாம் தேடிவந்தேனென் உத்தமனைக் காணேனே |
சேப்பிளை சொல்விருத்தம் |
திருச்சினாப் பள்ளிமுதல் சிறந்த |
தொருகீழ் பாதிதேச மெல்லாம் |
|
விரசுடனே தேடிவந்தோம் |
வீரமுடி காத்தவனைக் காணோம் |
|
தரும்பொரு ளாய்ப்பரி மணத்தை |
தேடுவதாய் தளத்தி னோமே |
|
வருமெனவே சேப்பிளையான் நடுக்கரை |
பார்ப்பதற்கு வருகின்றாரே |
|
வசனம் : சேவகர்களே தென்கரை முழுதும் தேடிப்பார்த்ததில் காத்தவனைக் காணாமையால் இனிமேல் நடுக்கரையைத் தேடுவோம் வாருங்கள். |
நடை |
பூண்டி தனிலிருந்து புகழுடனே மேற்காக |
வேண்டியுடன் ஊர்தோறும் விதவிதமாய்த் தேடுகின்றார் |
|
கோவிலடி அணையும் கிளிக்கூடு கல்லணையாம் |
தாவி யணுயணுவாய்த் தான்தேடி வாரார்கள் |
|
உத்தம சேரியிலும் ஓடையிலும் சோலையிலும் |
சுத்த மயில்பரவும் தோவூர்க் கரைதனிலும் |
|
பனையவரம் தன்னிலும் பாங்காய் மடந்தனிலும் |
இனைய நடுக்கரையில் இருக்கும் கிராமமெல்லாம் |