காத்தவராயன் கதைப்பாடல்39

இந்திரர்க்கு இந்திராணி இசைந்துஅருகிருக்க
வந்து அகலிகையை மருவிப் புணரலையோ20
 
எடச்சிகள் சேலையெலாம் எடுத்து மரமேறி
கடைக்கண்ணாள் பார்த்திருந்தார் கன்னியர் மேலாசையதால்
 
வர்ணமுள்ள மாயவனார் வாழும் இடைச்சியுடன்
வெண்ணெய் திருடியுண்டு மேவிப் புணரலையோ
 
பார்த்தனும் சுபத்திரையாள் பாங்காய் கலந்திருக்க
வேத்துமையாய் அல்லியரை மேவிப் புணரலையோ
 
சாதனமாய் கண்ணகியும் தானி்ருக்கக்கோவலனார்
மாதவியைக் கூடி மருவிப் புணரலையோ
 
கானத் தபசிருக்கும் கௌசிகரும் ஆசையதால்
மேனகையைக் கூடி மேவிப் புணரலையோ
 
வருத்தும் வசிஷ்டரிஷி வையகத்தி லெப்போதும்
அருந்ததிப் பெண்ணாளை அணைந்து கலரலையோ
 
முன்னும் சிலபெரியோர் மூம்மூர்த்தி தான்முதலாய்
வர்ணமுள்ள பெண்களுடன் மருவிப் புணரலையோ
இன்னமொரு வார்த்தை இசைந்துரைக்க நீர்கேளும்
 
 
பட்சமுடன் போசனத்தை கையாலேந்தி
   பாலமிர்தம் புகட்டினதால் பயனுண்டாமோ
 
இச்சையுடன் கலிதனக்கு மாலையிட்டாள்
   இதுபெரிதோ அறியாம லெரிந்துபோடும்
 
உச்சிதமாய் தேள்விஷங்கள் பந்து ருமாந்தர்
   உறுதியுடன் துஷ்டருக்குச் சொன்னபுத்தி
 
அட்சணமே போய்விடுங்காண் சொன்னேன்
   அரசனே என்வசனம் கேட்பீரே
 
 
கேட்டிடுவீர் வீரய்யனும் விருப்பமுடன்
   கொண்டுமிகப் பெண்ணொளித்தார் கிருட்டிணனும்
 
நாட்டமுடன் இந்திரரும் அகலிகைக்காய்
   நலமுடனே சாபம்பெற்றான் முனிவரிடத்தில்