|
நாடெல்லாம் சுற்றி நடந்துவந் தெந்தனுட |
வீடல்லாம் வேற வீட்டில் படுத்தறியேன் |
|
தகப்பன் சேப்பிளையான் தன்னுடைய பஞ்சணையில் |
உகந்து படுத்திருப்பேன் உத்தமனே ஆரியப்பா |
|
உந்தனுட ஆக்கினைக்கு உட்பட்டு யானிருக்க |
சந்தேகங்கள் சொல்லுகிறேன் சாமியினிக் கேளுமைய்யா |
|
சோமாசி பெற்ற சத்தரியாள் மாலையரை |
காம ரதியாளைக் களவில் எடுத்தேனோ |
|
அய்யமார் பெண்ணை அநியாய மாகவேதான் |
மெய்யாக யான்சிறையாய் விரும்பி யெடுத்தேனோ |
|
ஆசையது கொண்டு அய்யமார் பெண்ணை |
பாசையினால் மந்திரித்துப் படுங்களவு செய்தேனோ |
|
மாறாக நடத்தைதப்பி மாறுபா டாகவேதான் |
சோர மிகச்செய்து சிறையெடுத்துப் போனேனோ |
|
சோசியத்தில் நானும் சுந்தரியாள் மாலையரை |
ராத்திரி வேளையிலே நற்சிறைகள் எடுத்தேனோ |
|
பாரில் சிறையெடுத்துப் பார்ப்பாரப் பெண்ணாலே |
ஊரைவிட்டு நானும் ஓடியே போனேனோ |
|
அட்டாவ தானியைப்போல் ஆள்குடைய கிண்ணரியும் |
பட்டப் பகல்தனிலே பாடிநான் வருகையிலே |
|
ஆத்தங் கரைதனிலே அநேகம்பேர் பார்த்திருக்க |
இதமுள்ள நீராட ஏகினேன் நீர்கேளும் |
|
தண்ணீர்த் துறைதனிலே தான்கண்டு மாலையரும் |
என்னழகைக் கண்டு இனிதுமையல் தானாகி |
|
|
என்கிண்ணாரச் சத்தம் கேட்டுமிகத் தான்நடந்தாள்22 |
மாலையரே என்பின்னே வாராதே என்றுசொன்னேன் |
|
சோலைக்கிளி மொழியாள் என்சொல்வசனம் கேட்காமல் |
வாரதைக் கண்டு மனதில் பயம்பிடித்து |
|
பார்தனிலே நானும் பறையன் பறையனென்றேன் |
சீருடனே நில்லாமல் திரும்பிவரக் கண்டருளி |
|
வருசையுடன் கைபிடித்து மாட்டாயக் காரர்தனை |
கூட்டி நடந்து கோமுதலைப் பாரில்வைத்து |