122 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
அவளும் நானும் எண்சீர் விருத்தம் பொங்கிவரும் நிலவொளியில் மலர்ந்து நிற்கும் பூத்தோய்ந்து வருதென்றல் உடலை நீவ சங்கொளிதோய் மாடத்துத் தங்கி இன்பம் தருகுடும்ப விளக்கெடுத்துச் சுவைத்தி ருந்தேன்; மங்கையவள் என்குடும்ப விளக்காம் நல்ல மனைவிவந்து ‘யார்உரைத்த திந்நூல்?’ என்றாள்; எங்கவிபா ரதிதாசன் என்றேன்; `அத்தான்! எனக்கவரை ஒருசிறிதும் பிடிக்கா’ தென்றாள் உயர்கவிஞன் உணர்ச்சிமிக்கான் புரட்சிப் பாடல் உரைக்கின்றான் தமிழமிழ்து படைத்துக் காக்கும் செயலினையே புரிகின்றான் இருந்தும் ஏனோ? வெறுக்கின்றாய்? செவ்விதழாய்! என்றேன்; அன்னாள் `மயல்புரியும் மங்கைதந்த இன்பம் என்றன் மாதமிழுக் கீடில்லை என்று சொன்னால் வயிறெரிய மாட்டாதோ? பெண்கள் கூட்டம் வாழ்த்திடுமோ? விட்டுவிடும் கவிஞர் பேச்சை’ என்றுரைத்தாள்; பெண்மயிலே! தமிழில் ஊறும் இன்பநிலை கண்டவர்கள் இந்த ஒன்றே நன்றென்பர்; நான்கூட அப்ப டித்தான் நடையழகி! நானுன்னை மணந்து கொண்ட அன்றுன்பால் அழகிளமை நிறையக் கண்டேன் ஆண்பிள்ளை ஒன்றுபெற்று விட்ட பின்னர் இன்றுளதோ அவ்விளமை? ஆத லாலுனுன் இன்பத்தும் சிறுகுறைவு காணல் உண்மை |