70 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
இன்பமில்லை எண்சீர் விருத்தம் எத்தனைதான் காத்திருந்தும் என்ம னத்தே இடங்கொண்டாள் எழில்கொண்டாள் நகைக்கும் பற்கள் முத்தனையாள் வரவில்லை பொறுத்தி ருக்க முடியவில்லை, அறிஞரவர் வரைந்து தந்த புத்தகத்தைப் புரட்டிவிட்டுப் பேசா தங்குப் பூட்டிவிட்ட வானொலியைத் திருப்பி விட்டேன்; அத்தனையும் வீணாயிற் றென்னி டத்தே அவளில்லை ஆதலினால் இன்ப மில்லை! அமையாத அலைக்கடலின் கரைய மர்ந்தேன் அலைநிமிர்ந்து காதலினை நிமிர்த்த தங்கே; இமையாடும் பொழுதேனும் இருந்தேன் அல்லேன். எழிற்பூங்கா வுள்நுழைந்தேன், தென்றல் வந்து சுமையாக மோதிற்று; நிழற்ப டத்தால் துயர்தீரும் எனநினைந்துச் சென்றேன் அங்கும் உமையாளும் சிவனாரும் காதல் கூர உருகியணைந் தமர்ந்திருக்கக் கண்டேன் கண்டேன்; மனமுடைந்து வீடடைந்து மாடி யேறி மலர்பரவு பஞ்சணையில் புரண்டி ருந்தேன் எனைமறந்த அவள்தந்த இன்பம் போன்ற இன்சுவைப்பால் அருந்தியபின் கசந்த தாலே சினமடைந்தேன்; முழுநிலவு கார்கி ழித்துச் சிறிதாகச் சாளரத்துள் கதிர்வீ சிற்றே அனநடையாள் என்னருகே இன்மை யாலே அதன்பாலும் அழகில்லை இன்பம் இல்லை! 3 |