264 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
32 உலகத் தமிழ்க் கழக வாழ்த்து கரும்பூறும் சாறுநிகர் தமிழைக் காக்கும் கருத்துடன்முத் தமிழ்க்கழகம் இங்குக் கண்டீர்; நரம்பேற உணர்வூட்டி, அறிவும் ஊட்டி, நன்மானம், பகுத்தறிவுச் சுடருங் காட்டிச் சுரும்பாக உழைக்கின்றீர் வாழ்த்து கின்றேன்; சொல்வேந்தன் எங்குலத்துத் தலைவன் பேரால் அரங்கேறி விழாவெடுக்க முயல்வீர்! உம்மை அன்பூறும் செந்தமிழால் வாழ்த்து கின்றேன். (25.08.1979 ஆம் நாள் பெங்களூர் உலகத் தமிழ்க் கழகக் கிளையில் நடைபெற்ற பாவேந்தர் விழாப் பாட்டரங்கில் தலைமையேற்ற பொழுது, உலகத் தமிழ்க் கழகத்தை வாழ்த்திப் பாடியது.) |