முறைவழிப் படுஉம்’ எனவும் மொழிந்தனன்; அதனால் நீந்தும் முயற்சியை நீத்தனன் ஆழ்ந்தனன்; ‘பெரியோரை வியத்தலும் இலமே தம்மிற் சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ எனுமொழி அவன்றன் ஏற்றமுங் காட்டும்; மனத்துறு பண்புடன் மானமுங் காட்டும். எனினும் ஒருவரை ஏற்றிப் புகழ்ந்து தனிநலம் ஒன்றே தகுமெனப் பேணித் தனித்திறங் காட்டுவன்; தாழ்த்த நினைப்பின் இவன்போற் பிறரை இகழ்வதில் பழிப்பதில் இனிமேல் யாண்டும் எவனும் பிறவான் தீதகல் வழியும் தேனிகர் மொழியும் ஓதிக் கெட்டவன் இவன்போல் இலனே உரைத்த குறிக்கோள், நடத்தும் வாழ்க்கை இணைத்து நோக்கின் இரண்டும் தனித்தனி; நினைதொறும் நினைதொறும் நெட்டுயி;ர்ப் புயிர்த்து நனிபட ரெய்தி நலிவுறும் மனனே. |