104 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
விற்போர் தொடுத்ததெனச் சொற்போர் நடத்திஉரம் விளைவாக உழைப்போரையும் விதிரா மனத்துணர்விற் புதிதாய்த் தழைத்துவரும் விழைவோடு தொழுதேத்துவாம் மற்போர் புரிந்துநம திப்பார் புரந்தவரின் மடிமீது வளர்ந்தமகளை மருவார் பகைத்தருகில் வருவார் பதைத்துவிழ மலைபோல நின்றமகளை முப்பா லருந்திநலம் தப்பா திருந்தவளை முதலாக வந்தமகளை முதிரா நலத்திளமை அதிரா தெடுத்துவரம் மொழியாளைப் புரந்தருளவே. (‘தமிழன்னை பிள்ளைத்தமிழ்’ என்ற தலைப்பில் ‘தமிழரசு’ ஏட்டில் காப்புப் பருவமாக வெளிவந்த பாடல்கள்) |