பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்141

13
போராட்ட வீரர்

போராட்டக் களங்கண்ட வீரர் - பாரில்
பொதுவான சமுதாய அறங்கண்ட சூரர்

- போராட்டக்

ஈரோட்டுத் தலந்தந்த பிள்ளை - எங்கள்
எழுச்சிக்கும் தன்மான உணர்ச்சிக்கும் தந்தை
வேரோட்ட முடியாமல் வேதக் - கொள்கை
வீணாகி மண்மீது பாழாகிச் சாயப்

- போராட்டக்

தீண்டாமை பின்னின் றிழுக்கும் - மாந்தர்
தெருவக்குள் நடமாட முடியாத வைக்கம்
ஆண்டோடி நேராகச் சென்றார் - சாதி
ஆணவப் போருக்குள் போராடி வென்றார்

- போராட்டக்

தேசியம் என்றிங்குக் கூறி - இந்தி
தேவையென் றோதினர் ஆட்சியில் ஏறிப்
பேசிய வாதத்தைக் கொன்றார் - இந்தி
பின்னிட்டுச் சென்றோடக் களமொன்று கண்டார்

- போராட்டக்

கலைகற்க உண்டிங்குச் சாதி - நின்று
கைகட்டிப் பணிசெய்ய உண்டிங்குச் சாதி
நிலைமுற்றும் அடியோடு மாறிக் - கல்வி
நீரெங்கும் பாய்ந்தோடக் களங்கண்டார் மோதிப்

- போராட்டக்