பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்145

பகலிலும் உழைப்பார் இரவிலும் விழிப்பார்
பகுத்தறி வுச்சுடர் எழுத்தினில் படைப்பார்
மிகுமிள வேனிலும் குளிர்பனி நாளிலும்
மிடுக்குடன் பொதுப்பணி யாற்றிட நடப்பார்

- தொண்டு

இளையவர் எனினும் இனியன உரைப்பார்
எதிரிக ளாயினும் கனிவுடன் அழைப்பார்
இளமையை இழந்தும் முதுமையை அடைந்தும்
இளையார் பணியிடைக் களையார் பெரியார்

- தொண்டு

பிறவியில் தலைவர் பெரும்பொருள் வணிகர்
பேணிய புகழுக் குரியார் எனினும்
துறவிகள் போலொரு தோற்றமும் உடையார்
துளிசெருக் கடையார் அடக்கமும் உடையார்

- தொண்டு

23.6.1979