192 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
36 பண்பு மலர் பரந்திருக்கும் உள்ளத்தை நெற்றி காட்டும்; பண்பாட்டை நகைதவழும் இதழ்கள் காட்டும்; சிறந்திருக்கும் கூர்மதியை மூக்கு காட்டும்; சிந்தனையின் ஆற்றலினை விழிகள் காட்டும்; கரந்திருக்கும் வீரத்தைப் புருவங் காட்டும்; கரகரத்த குரல்காட்டும் பெருமி தத்தை; சுரந்திருக்கும் பேரருளை உள்ளங் காட்டும் சுட்டுவிரல் தமிழரின் ஒருமை காட்டும். எளிமைதனை அணிந்திருக்கும் உடைகள் காட்டும்; ஏற்றத்தை அவர்கண்ட நடைகள் காட்டும்; ஒளிமிகுந்த அறிவாளர் எடுத்து ணர்த்தும் உயர்நெறிகள் போற்றுவதைச் செவிகள் காட்டும்; தெளிவுடைய மனமுடையார் அண்ணா என்று செப்புகிற உறவுச்சொல் உரிமை காட்டும்; அளிமிகுந்த துணிவுதனைச் செயல்கள் காட்டும்; அடக்கத்தைக் குறளான உருவங் காட்டும். பொறுமைஎனும் உயர்பண்பு கொண்டவுள்ளம் பொறாமைதனை எள்ளளவும் காணா வுள்ளம் வறுமையினைக் காணுங்கால் இரங்கும் உள்ளம் வளர்தமிழின் வாழ்வுக்கே வாழ்ந்த வுள்ளம் சிறுமையினைக் காணுங்கால் சீறும் உள்ளம் சினமென்னுஞ் சுடுநெருப்பைச் சேரா வுள்ளம் |