16 சிரிப்பும் அழுகையும் கார்முகில்கள் நீர்சொரிய, வான்மு ழங்கக் கண்கவரும் கொடிமின்னல் விளக்கங் காட்டச் சீர்பெருகும் நிலமகளை ஏரைத் தாங்கும் செய்யவளைப் பரிசமெனக் கலப்பை தந்து பார்புகழ மணம்புணர்ந்தான் உழவன் என்பான் பாராமல் ஒருநாளும் இருந்த தில்லை; ஓர்பொழுது செல்லாமல் கிழவன் நிற்பின் ஊடிவிடும் என்றஞ்சி நாளுஞ் செல்வான். நெஞ்சுவந்து பிரியாமல் வாழும் நாளில் நிலமங்கை ஈன்றெடுத்த செல்வங் கண்டான் விஞ்சுகின்ற மகிழ்க்கடலில் திளைத்து நின்றான் விளைநிலத்தாள் தருஞ்செல்வம் உலகுக் கெல்லாம் எஞ்சலிலா இன்பத்தை ஈத லாலே ஈன்றதொரு ஞான்றையினும் பெரிது வந்தான் தஞ்சமென வந்தவரைத் தாங்கு கின்ற தனியறத்தை வேளாளன் பேணு கின்றான். உழவனெனப் பேர்சொல்லிச் சோம்பி நின்றே உழைப்பொன்றும் இல்லானாய் உறங்கி வாழ்ந்து பழகியவன் விதியினையும் துணையாக் கொண்டு பசிபோக்க ஒன்றுமிலேன் என்று துன்பில் |