126 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
சொத்தெனக் கொண்டு துய்க்க லாயினர்; அத்தகு விருதினை முத்தமிழ் வல்ல பண்டித மணிக்குப் படைக்கமுன் வருங்கால் தனிச்சொத் தாக்கியோர் தடைபல இழைத்தனர் முனைத்தெழும் அரசரண் ணாமலை முயல 60 மணிக்கவ் விருது வழங்க லாயினர்; அணிக்கு மற்றோர் அணிவந் தடைந்தது; பெற்ற விருதினைப் பேணார் சிலருளர் உற்றஅவ் விருதுக் குரியரும் ஆகார் சொற்புகழ் விருதுகள் சுமந்தே திரிவர் 65 வருபுகழ் விலைக்கு வாங்குவோர் அவராம்; ஒருதனி மணியோ உரியவர் ஆனார் விருதுகள் இவர்க்கு மேன்மைகள் தந்தன இவரால் விருதுகள் ஏற்றமும் பெற்றன; தான்சிறி தாயினும் தக்கார்கைப் படுமேல் 70 வான்சிறி தாக வளர்ந்திடும் அன்றே. |