நச்சிட்ட2 ஒருகுலத்தார்க் குரித்தே என்று நவில்நாளில் அத்தொழிலில் வல்லா னாகி மெச்சிட்ட புகழ்படைத்துச் சிறந்து நின்றான் மேவுகதி ரேச’னென ஒருவர்3 சொன்னார். 1 ஒன்பது சுவைக ளென்ன உயர்ந்தவர் ஓதி வைத்த ஒன்பது மணிகள் பூட்டி ஓட்டினன் சிறுதே ரிங்கே தென்வட மொழிக ளாய்ந்த தெள்ளியன் கதிரே சப்பேர் மன்னிய மணியே என்று மற்றொரு துறவி4 சொன்னார். 2 முதனூலின் பொருள்முற்றும் தெளியக் காட்டும் முகம்பார்க்கும் நல்லாடி,1 அந்நன் னூலின் எதன்சுவையும் குன்றாமல் வடித்துக் காட்டும் ஏதுமிலா நிழற்படமாம்; வடமொ ழிக்கண் உதவுமொரு பெருநூலைத் தமிழில் ஆக்கி உருட்டியமண் ணியல்சிறுதேர் என்னும் நூலே; புதுமைசெயும் பண்டிதமா மணியை என்றும் போற்றுதும்யாம் எனமொழிந்தார் தமிழ வேளே.2 3 எதுமுதனூல் எதுவழிநூல் என்று ரைக்க இயலாது தடுமாறப் படைத்துத் தந்தான் முதனூலிற் றெளிவின்றிக் கிடந்த வற்றை மொழித்திறத்தால் முட்டறுத்துத் தெளிய வைத்தான் அதனாலே அவன்பெருமை ஓங்கிற் றம்மா! அவன்பெரிய பண்டிதன்தான் என்று ரைத்தார் முதுமொழியாம் வடமொழிதேர் கல்லூ ரிக்கண் முதன்மையர்சுப் பிரமணிய ஐயர் தாமே. 4
2.விரும்பப்பட்ட, 3.வயிநாக.ராம. அ.இராமநாதச்செட்டியார் 4.விபுலாநந்தஅடிகள், 1.கண்ணாடி, 2.த.வே.உமாமகேசுரர் |