வழுதி | : | ஒருமை ஒற்றுமை ஆயிரு சொல்லின் பொருண்மை யொன்றோ . . . . . . . . |
நாகனார் | : | . . . . . . . புகலும் கேண்மின் ஒன்றுடன் மற்றொன் றிணைவ தொற்றுமை; ஒன்றினுள் ஒன்று பொன்றுவ தொருமை; இணைந்தும் தனித்தும் இயங்குவ தொற்றுமை; அணைத்தபின் ஒன்றா யமைவ தொருமை; அடுக்குத் தொடர்போல் அமைவ தொற்றுமை; இரட்டைக் கிளவியென் றிருத்தல் ஒருமை; |
வழுதி | : | இரண்டும் ஒன்றென் றிருந்தோம் தெளிவுறத் திருந்தும் பொருண்மை தேர்ந்தெமக் களித்தீர்; |
நாகனார் | : | விந்தை மீதூர் வியன்பெறு செல்வம் முந்தையர் நமக்குத் தந்தவை பலப்பல; கூம்பாச் செல்வம் ஓம்பா நிலையிற் சோம்பித் திரியிற் றொகுத்தவை பாழாம்; போதும் அவையெனப் பொந்திகை பெறுதல் தீதாம்; ஆதலின் தெள்ளிய புலத்திற் கூரறி வுக்கலங் கொண்டுழு வோர்தாம் ஊரினர் உணக்கரு வூலம் நிரப்பிப் புரத்தல் வேண்டும் புதுவன விளைத்து; |
குழலி | : | முந்தையர் முனைந்து தந்தவை யனைத்தும் உந்தும் உணர்வின் ஒம்புதும் ஒம்புதும்; |
வழுதி | : | ஈட்டுதுஞ் செல்வம் கூட்டுதும் மிகவே நாட்டிற் பெரும்புகழ் நாட்டுதும் யாமே. |